Kathiravan Manoharan

An Entrepreneur, Coach, IT Consultant, Strategic Adviser, and a Traveler craving to explore and contribute to forming a better society.

Featured Posts

Sports

Books

Travel

Sunday, July 16, 2017

என். சொக்கனின் "மொஸாட்" - ஓர் அறிமுகம்

No comments :
தஞ்சையில் இருந்து காரில் சென்னை திரும்புகையில், திண்டிவனம் அருகே ஒரு உணவக வாசலில் பெரிய புத்தகக் கடை போட்டிருந்தார்கள். நிறையப் புத்தகங்களின் நடுவே, ஒரு புத்தகம் மட்டும் என்னை, என் கவனத்தை ஈர்த்தது. சற்றும் யோசிக்காமல் என். சொக்கனின் "மொஸாட்" புத்தகத்தை வாங்கினேன்.

இரண்டு நாட்கள் கழித்து சிங்கப்பூர் விமானத்தில் ஏறியவுடன் இந்த புத்தகத்தை தான் கையில் எடுத்தேன். 'Munich' திரைப்படத்தை பார்த்ததில் இருந்தே மொஸாட் பற்றி படிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. இந்த திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். அப்படியான சாகசங்கள் நிறைந்த படம். புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு தான் வாங்கினேன். தலைப்பினால் ஈர்க்கப்பட்டு பல புத்தங்களை வாங்கி ஏமாந்து போய் இருக்கிறேன். இதுவும் அது போன்று ஒரு புத்தமாகி விடுமோ என்று முதலில் தயக்கம் தான். ஆனால், கையில் எடுத்த இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்தாகிவிட்டது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை படித்த ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் என். சொக்கன். புத்தகம் முழுதும் எளிய வார்த்தைகள் கொண்டதாகவும், 'நடை' படிப்பதற்கு இலகுவாகவும் இருப்பது சிறப்பு. அடுத்தது என்ன என்ற தேடலையும் நமக்குள் உருவாக்குவது மிகச் சிறப்பு.

என்னைப்  பொறுத்தவரை,  வரலாற்றை சார்ந்த கட்டுரைகள், புத்தகங்கள் எழுதுவதில் முக்கிய சிக்கல் அதனினூடே எழுத்தின் வலிமையை சேர்ப்பதில் தான் இருக்கிறது. தனது மொழியில் அதை வெகு இலகுவாக கையாண்டிருக்கிறார் 'சொக்கன்'; மேலும் அந்த மொழிநடை மூலம் படிக்கும் நம்மை மேலும் ஆர்வம் கொள்ளவும் செய்கிறார். உதாரணத்திற்கு, பதுங்கிய புலி என்ற கட்டுரையின் முடிவை,

"மொஸாட் புலி, தன்னுடைய அவமானக் காயங்களை நக்கிக் கொண்டது. முன்பை விட அதிக வெறியுடன் பாயத் தயாரானது!"

என்று பதிந்திருக்கிறார். இது போன்ற எழுத்துக்கள் தான் இந்தப் புத்தகத்தை வேகமாக படிக்கவும், கீழே வைக்காமல் முடித்துவிடவும் தூண்டுகிறது. இன்னோர் இடத்தில், மொஸாடின் சாமர்த்தியத்தை, இப்படி எழுதியிருக்கிறார்.

"மொஸாடின் சாமர்த்தியம், அவர்கள் ஒருவரைப் பின்தொடர்கிறார்கள் என்றால், அது அவருடைய நிழலுக்குக்கூடத் தெரியாது"

ஆங்காங்கே, "டொனோவன் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான், 'அது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்டா, மவனே'" என்று நம்மை சிரிக்க வைக்கவும் செய்கிறார். எடுத்ததில் இருந்து கீழே வைக்க முடியாமல் படித்த புத்தகங்கள் மிகவும் குறைவு. இது போன்ற புத்தங்கள் இருந்தால் ஒரு 'Subject'-ஐ எளிதில் அணுகித் தெரிந்துக் கொள்ளலாம். அதற்காகவே என். சொக்கனின் 'மொஸாட்' திரும்பத் திரும்ப படிக்கலாம்.

Thursday, March 16, 2017

An important event in Delivery Automation - UPS successfully tests drones for delivery

No comments :
An important event for those who watch industrial automation closely. United Parcel Service (UPS) has recently tested drones for delivering packages to remote areas. The drones are supplementing the existing delivery trucks to deliver packages. The drone weighs 9.5 ounces, it can fly for 30 mins and uses GPS to deliver the goods/packages to the designated customer address. Unlike other drone tests, this test incorporated a day-to-day delivery operations.Ohio based Workhorse group was behind this test as the company built the drone that was used for this test. With this successful key event, February 2017 will be an important month in the industrial automation timeline.

Press release:
https://www.pressroom.ups.com/pressroom/ContentDetailsViewer.page?ConceptType=PressReleases&id=1487687844847-162
Sunday, December 25, 2016

விமர்சனத்தின் அரசியல்

No comments :
முகநூல் நண்பர் திரு. மந்திரமூர்த்தி, தனது சுவரில் ஜெயமோகனின் கட்டுரையைப் பகிர்ந்திருந்தார். மேலோட்டமாகப் பார்ப்பின் கட்டுரை அருமை. மேலும் அதை ஆழ்ந்து அணுகும் போது விமர்சனங்களின் அரசியல் புலப்படுகிறது.

"விமர்சனம் கூடாது என்பதல்ல நான் சொல்லவருவது. விமர்சனம் ஆழ்ந்து அறிந்த ஒருவரால் சமநிலையுடன் செய்யப்படவேண்டும். முழுமையாகச் சொல்லப்படவேண்டும். சீண்டும் கூற்றுகள், பொத்தாம்பொது அபிப்பிராயங்கள், நக்கல்கிண்டல்கள் விமர்சனங்கள் அல்ல." - ஜெயமோகனின் கட்டுரையிலிருந்து.

ஜெயமோகனின் மேற்குறிப்பிட்டக் கூற்று விமர்சனத்தின் கட்டமைப்பு சார்ந்தது, மிக நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய ஒன்று. அவரின் இந்தக் கருத்தோடு பலரும் ஒத்துப் போகக்கூடும். ஆனால் இங்குப் பிரச்சினை, விமர்சனத்தின் கட்டமைப்பு பற்றிய புரிதலின்றி விமர்சனம் எழுதுவதல்ல. விமர்சனத்தின் கட்டமைப்பு பற்றிய ஒரு புரிதலின்றி எழுதுபவர்கள் விமர்சகர்களாக இருக்க முடியாது. அவை விமர்சனமும் இல்லை.

இங்குச் சிக்கலே விமர்சிக்கும் போது, விமர்சகரின் சமநிலையற்ற உள்ளுணர்வு வார்த்தைகளாய் வடிக்கப்படுவது தான். ஜெயமோகனின் அரசியல் நிலைப்பாடு சார்ந்த கட்டுரைகளில் "எழுதியவரின் பெயரைப் பார்ப்பேன்" என்று அவரே பொத்தாம் பொதுவாக எழுதி இருக்கிறார். ஆக, இது வெறும் கட்டமைப்பு பற்றியது மட்டுமல்ல.

விமர்சிப்பவர் சமநிலையின்றி இருக்கும் எழுத்தை வாசகனால் எளிதில் அடையாளம் காண முடிகிற போது, எழுதுபவரால் காண முடியவில்லையா? அல்லது சமநிலையின்றி மனது இருக்கும் போது விமர்சனம் எழுதுவது எழுத்தின் அரிப்பா என்பது புரியவில்லை?

அது ஒரு புறமிருக்க. பொதுத் தளத்தில் ஒரு படைப்பு விமர்சனத்திற்கு உட்பட்டது தான். ஆயினும், விமர்சனமானது அதன் எல்லைகளுக்குள் இருந்து விட்டால் புதிய எழுத்து, புதிய படைப்பு, புதிய முயற்சி, புதியவர்கள் என்ற 'சுழற்சி' இருந்துக் கொண்டே இருக்கும். கீழே உரலியில் இருக்கும் ஜெயமோகனின் கட்டுரையில் எது விமர்சனம் அல்ல என்பதைக் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு மாலன் அவர்கள் தனது கட்டுரையில் ரசனை சார்ந்த இலக்கியத் தரத்தைப் பற்றியும் எழுதி இருந்தார். இது இரண்டுமே அனைத்து விமர்சகர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறன்.

தமிழ் வெளியில் நக்கலும் கிண்டலும், சீண்டும் கூற்றுகளுடனும், பொத்தாம் பொது அபிப்ராயங்களுடனே படைப்புகளைப் பற்றிய விமர்சனங்கள் வலம் வருகின்றனவே, அவை விமர்சனம் இல்லையா?

விமர்சனங்கள் விரிவானவை. நுணுக்கங்கள், விமர்சிக்கும் படைப்பின் அறிவும், அதன் துறை சார்ந்த அறிவும் அதன் மூலம் படைப்பை அணுகுதல் என்று விமர்சனத்திற்கென்று ஒரு கட்டமைப்பு உண்டு. ஓரிரு வரிகளில் அதைச் சொல்ல முற்படுவது விமர்சனமாகாது. மாறாக, ஒரு சாமான்யன் சொல்வதைப் போன்ற வெறும் தனிமனிதக் கருத்து மட்டுமே. சில நேரங்களில் எழுதுபவரின் மொழி ஆளுமையில் நமது மனம் லயிக்கும். அத்தருணங்களில், வெறும் தனிமனிதக் கருத்தை விமர்சனம் என்று பொருள் கொள்ளக் கூடாது. அதிலும் குறிப்பாக, மனதில் தோன்றியதை ஓரிரு வரிகளில் சமூக வலைத்தளங்களில் ஜல்லியடிப்பதை விமர்சனங்களுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.

Saturday, October 8, 2016

Tamil Poet Na. Muthukumar - A fateful end to an incomplete poem

No comments :
My article about the Poet, Lyricist, and Author, Late Na. Muthukumar is published in "Ilakkiya Vel", a literary magazine in Tamil language (Oct '16 Edition).
----
'நிறைவுறாது முடிந்த கவிதை' - என்ற தலைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை "இலக்கிய வேல்" மாத இதழில் பிரசுரமாகியுள்ளது. நீங்கள் வாசிப்பதற்காக, எனதுக் கட்டுரையின் மின்வடிவை இணைத்துள்ளேன்.
"இலக்கிய வேல்" இதழின் ஆசிரியர் Chandar Subramanian அவர்களுக்கு நன்றி.
இலக்கிய வேல் இதழைப் படிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி:
திரு. சந்தர் சுப்பிரமணியன்
33 வாட்டர்ஃபோர்ட் அடுக்ககம்,
72/1, கிழக்குக் கடற்கரைச் சாலை,
திருவான்மியூர், சென்னை 600 041.
chandarsubramanian@gmail.com
Tuesday, August 23, 2016

பொருளுக்கான சந்தையை எப்படி அளவிடுவது

No comments :
ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! – (பாகம் 5)
சரியான எண்ணமும் (Idea), திடமான திட்டமும் இருந்தால், ஏற்கனவே சந்தையில் தோல்வியடைந்த ஒரு பொருளை கூட நாம் வெற்றிப் பொருளாக்கலாம். இதற்கு பல உதாரணங்கள் உண்டு. அவ்வாறான ஒரு விடயத்தை மையமாகக் கொண்டு தான் எனது “ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்!” தொடரின் 5ஆவது கட்டுரையை எழுதி இருக்கிறேன்.
மேலும், பொருளுக்கான சந்தையை எப்படி அளவிடுவது, எண்ணத்தை எவ்வாறு அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது போன்ற தகவல்களுடன் Munaivu இணைய இதழில் வெளியாகி இருக்கிறது. படித்து விட்டு பகிரவும்.
கட்டுரையிலிருந்து...
“சந்தையில் தோல்வியடைந்த ஒரு பொருளை கூட நாம் வெற்றிப் பொருளாக்கலாம். இதற்கும் செல்பி ஸ்டிக் மிகச் சிறந்த உதாரணம். உலகின் வட மூலையில் இருக்கும், கனடாவை சேர்ந்த வேனே ப்ரொம் (Wayne Fromm) செல்பி ஸ்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, கிழக்கில் ஜப்பானை சேர்ந்த ஹிரோஷி யூதா (Hiroshi Ueda) இதேப் போன்றதொரு குச்சியைக் கண்டுபிடித்தார்.”

Saturday, August 6, 2016

A beautiful, and natural hot spring valley

No comments :
Geothermal Valley - Beitou, Taiwan

Beitou is an interesting town in Taiwan, known for its rich history and its different attractions that draw tourists from worldwide. Located 12kms away from the Taipei main city, this place has some interesting attractions that give compelling reasons to visit this place. One such attraction is "The Beitou Geothermal Valley", located near Xinbeitou hot spring museum. This valley is a naturally a wonderful place. Water is geothermally heated as it passes through this valley. Due to the geothermal heating process, the steam rises high as the water is heated. It is extremely hot that you can't bath and it is dangerous even to touch. The water in this pool is naturally heated even to 90-100*c sometimes. The Water in the valley is in light green color (as in a jade stone). A few years back, the visitors were allowed to boil eggs in this valley, but now it is prevented due to safety and to avoid water contamination.

Although you can't bath in the geothermal valley for obvious reasons, Beitou town is famous for hot spring pools (both public and private). Tourists flood into this place to bath in hot spring which seems to have health benefits.

This place is easily reachable from Taipei City. Check out the video in this post that I captured during my visit to this place.Transportation - How to reach?
Take Taipei MRT and get down at Xinbeitou Station. You can follow the directions and signs from the exit.

Wednesday, August 3, 2016

ஜப்பான்

No comments :

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த போது, இரண்டு அணுகுண்டுகளை இதயத்தில் வாங்கிய தேசம். ஹிரோஷிமா, நாகசாகி என இரு நகரங்கள் முற்றிலும் அழிந்த போதும், மீண்டு எழுந்த தேசம். அறிவியலில் சீரிய முன்னேற்றம் கண்ட தேசம். மிகச் சுறுசுறுப்பான மக்கள் வாழும் தேசம். மக்களின் சராசரி வயதுப்படி, உலகில் மூன்றாவது அதிக முதியவர்கள் வாழும் தேசம். 

இந்த சிறிய தேசமான ஜப்பானில் தான், பல தலைமுறைகளை கடந்து பல தொழில்கள் நடந்து வருகின்றன. 2008-ம் ஆண்டு பேங்க் ஆப் கொரியா நடத்திய ஆய்வின் படி, உலகில் 200 ஆண்டுகளை கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 5,586. இதில் ஜப்பானை சேர்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 3,146!

இதைத் தொடர்ந்து 2012-ல், டோக்யோ ஷோக்கோ (Tokyo Shoko) என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, 100 வயதைக் கடந்த ஜப்பான் நிறுவனகளின் எண்ணிக்கை 21,000-க்கும் மேல்!

“கோங்கோ கூமி” (Kongō Gumi) என்ற கட்டுமானத் துறையை சேர்ந்த நிறுவனம் கிபி 578-ஆம் வருடம் தொடங்கப்பட்டது. 40 தலைமுறைகளை கடந்து நடந்து வந்த இந்த நிறுவனம், 2006-ஆம் ஆண்டில் (1428 ஆண்டுகளுக்குப் பிறகு) தகமட்சு (Takamatsu) என்ற நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. “கோங்கோ கூமி” (Kongō Gumi) தான் உலகின் மிகப் பழமையான நிறுவனம்.

ஜப்பானில் தான் 100 வயதைக் கடந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள். அதிக வயதானவர்கள் மட்டுமல்ல, அதிக வயதான நிறுவனங்களும் இருக்கும் தேசம், ஜப்பான்.

Tuesday, August 2, 2016

வங்கியல்லாத வங்கி!

No comments :
ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! (பாகம்-3)


அமெரிக்க சட்டத்தின் படி வங்கியாகவே இல்லாத ஒரு நிறுவனம் எப்படி வங்கிச் சேவை புரிந்து வருகிறது, என்பதை மேற்கோள் காட்டி, "வங்கியல்லாத வங்கி" என்ற தலைப்பில் எனது தொடர் கட்டுரையின் மூன்றாவது பாகம் Munaivu இணைய இதழில் வெளியாகி உள்ளது.

தொழில் துவங்க உத்தியே அடிப்படைத் தேவை என்கிற கருத்தை மையமாகக் கொண்டு நிறுவப்பட்ட, உங்களுக்கு மிகவும் பரிச்சயமான, ஒரு இந்திய நிறுவனத்தைப் பற்றியும் எழுதி இருக்கிறேன். படித்துவிட்டுக் கருத்துக்களைப் பகிரவும்.

கட்டுரையிலிருந்து...
"2005-ல் தீபாவளிக்கு ஊருக்குச் செல்லப் பேருந்துப் பயணச்சீட்டுக் கிடைத்திருந்தால் அதன் நிறுவனர்கள் ஊருக்குச் சென்றிருப்பார்கள்; நாம் இன்னும் தீபாவளி பொங்கலுக்குப் பயணச்சீட்டு வாங்க அல்லாடிக் கொண்டிருந்திருப்போம். பயணச்சீட்டுக் கிடைக்காமல் இருந்த ஒருவரின் எண்ணத்தில் ஒரே வாரத்தில் உருவான ஒரு தொழில் தான் இன்றைக்கு ரூ.600 கோடி வருமானத்தை எட்டியிருக்கிறது."

மேலும் படிக்க: 

Saturday, July 16, 2016

அலுவலகக் கட்டிடம் கூட இல்லாமல் ஒரு வங்கி!

No comments :
ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டும்! - பாகம் 2

"ஓர் அலுவலகக் கட்டிடமின்றிப் பல கோடிகளைக் கையாளப்போகும் ஒரு வங்கி இயங்க முடியுமானால், நீங்கள் துவங்க விரும்பும் தொழில் ஏன் இயங்க முடியாது?".

மேற்கண்ட வரிகள், முனைவு மின்னிதழில் எனது தொடரின் இரண்டாவது கட்டுரையில் வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிருங்கள்.மேலும் படிக்க:

Sunday, June 26, 2016

நன்றி!

No comments :
தொழில் முனைவது சிரமம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தி Munaivu இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது புதிய தொடரைப் பற்றிய உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. முகநூல் பக்கத்தில் பகிர்ந்தமைக்கும், தனியே தொடர்பு கொண்டு உள்ளீடுகள் (Inputs) கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.


இத்தொடருக்காக ஏற்கனவே 4 கட்டுரைகளை கொடுத்துவிட்டேன். எனவே, உங்களின் உள்ளீடுகளை அடுத்து வரும் பகுதிகளில் தேவைக்கேற்ப பொருத்திக் கொள்கிறேன். அடுத்தடுத்த கட்டுரைகளுக்கான உங்கள் கருத்துக்களையும், உள்ளீடுகளையும் தொடர்ந்து பகிருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இத்தொடரில் அடுத்து வரும் கட்டுரைகளில், சிறிதாக ஆரம்பித்து மிகப்பெரிய தொழிலை நிறுவிய நிறுவனங்களைப் பற்றியும், இடமோ பொருளோ இன்றி துவங்கி வெற்றி கண்ட நிறுவனங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறேன். சிறிய அங்காடி முதல் பெரிய வங்கிகள் வரை கண்ட வெற்றிகளை சுவாரசியமாக இந்த தொடரில் காணலாம். ஒரு தொழிலை எவ்வாறு நிறுவுவது என்பதையும் காணலாம்.

மேலும், உங்களுக்கு தெரிந்த சிறிய நிறுவனங்களையும் அதன் நிறுவனர்களையும் எனக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் வெற்றி, புதிதாக களம் கண்டு தொழில் முனைய விரும்புவோருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி தொழில் துவங்க ஒரு தூண்டுதலாகவும் அமையும் என நம்புகிறேன்.

எனது தொடரிலிருந்து சில பகுதிகள்:
"இதுபோன்ற நிறுவனங்கள் செய்த ஒரே பணி, மக்களை ஈர்த்து, அவர்களைக் கொண்டே, அவர்களின் தேவையை மையமாகக் கொண்டே, தங்களின் இணைய தளங்களைக் கட்டமைத்ததுதான்."
.....
"இந்தியா போன்ற பெரு நாடுகளின் பலம் அவற்றின் மக்கள் தொகைதான். மக்கள் தொகை இருக்குமளவிற்குத் தொழில் வாய்ப்புகளும் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. தனது படிப்புக்கேற்ற வேலை, வயது முதிர்ந்தவுடன் பணி ஓய்வு என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, தொழில் முனைந்து தனக்கென ஒரு தனித்துவ அடையாளத்தைத் தேடும் பெரிய இளைஞர்க் கூட்டமும் அதற்கான வெளியும் சரிவர அமைந்த நவீன யுகத்தில் நாம் வாழ்கிறோம்."

மேலும் படிக்க, http://www.munaivu.com/innovative-ideas-wins-