An Entrepreneur, Coach, IT Consultant, Strategic Adviser, and a Traveler craving to explore and contribute to forming a better society.

Sunday, May 25, 2014

நரேந்திர மோதி என்ன செய்யலாம்?

No comments :
நரேந்திர மோதி தான் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு என்று தீர்மானித்து மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் சுதந்திர தின உரை மிகவும் உணர்ச்சிமிக்கதாக இருந்தது. ஒரு பிரதமர், தனது நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தயக்கமின்றி சுதந்திர தின உரையில் குறிப்பிட ஒரு துணிச்சல் தேவை, அந்த வகையில் அவருக்கு ஒரு சபாஷ் போடலாம். இனி, பிரதமர் நரேந்திர மோதி என்ன செய்ய போகிறார் என்று அனைவருக்கும் ஒரு ஆவல் இருக்கிறது. அவர் என்ன செய்ய போகிறார் என்று அவருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். 

இருப்பினும், ஒரு முக்கியமான வேண்டுதலை அவர் முன் நாம் வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். அதாவது, நாட்டின் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடையே உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்க வேண்டும்.


இன்றைய இந்திய உழைக்கும் வர்க்கத்தின் அபாயகரமான மனப்போக்கு:
  1. தான் செய்யும் வேலையின் மீது பற்றற்று இருப்பது. 
  2. வேலை என்பது சம்பளத்திற்காக மட்டுமே; நாம் செய்யும் வேலையின் வெளியீடு (Output), நாம் வேலை செய்யும் நிறுவனத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பது.
மேற்குறிப்பிட்ட அனைத்துமே இந்திய வளர்ச்சிக்கு மிக ஆபத்தானவை.

1. வேலையில் பற்றின்றி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் ஒன்று, சிரமமான போக்குவரத்து மற்றும் நெரிசல். ஏழை-நடுத்தர வர்கத்தின் மிக பெரிய சவால் மற்றும் கனவு இரண்டுமே பேருந்து அல்லது ரயிலில் இருக்கையை பிடிப்பது. இன்றும் பலர் பேருந்தில் வேலைக்கு செல்லும் பொது நின்று கொண்டே செல்ல நேரிடுகிறது. வேலையில் இருக்கும் சிரமத்தை விட வேலைக்கு செல்ல இருக்கும் சிரமம் சொல்லி மாளாது.
அரசு என்ன செய்யலாம்? போக்குவரத்தை எளிமைப்படுத்தி அனைவரும் சுலபமாக வேலைக்கு செல்ல உதவுவதன் மூலம் மக்களை உழைப்பதற்கு தூண்ட முடியும். இத்தகைய முயற்சிக்கு மாநில அரசின் பங்களிப்பும், உறுதுணையும் மிக முக்கியம். இரண்டாம் நிலை (Tier-2) மற்றும் மூன்றாம் நிலை (Tier-3) நகரங்களில் இன்றும் போக்குவரத்து சிறப்பாக இல்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. வேலை செய்யும் நிறுவனத்தின் மீது அக்கறை இல்லாமல் இருப்பதற்க்கு சில கரணங்கள் அவற்றுள் சில:
  • நிறுவனமானது லாப நோக்கில் மட்டும் செயல்படுவது. 
  • தொழிலாளர்களின் நன்மையை கருத்தில் கொள்ளாது இருப்பது.
  • நிறுவனமானது எப்போது வேண்டுமானாலும் தொழிலாளர்களை வேளையில் இருந்து நீக்கலாம் என்ற எண்ணம் தொழிலாளர்களிடையே மேலோங்கி இருப்பது.

அரசு என்ன செய்யலாம்


ஒரு நிறுவனமானது தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட கூடாது என்ற சட்டம் இயற்ற்றுவதன் மூலம், தொழிலாளர்களின் எண்ணத்தை மாற்ற முடியும். சட்டமானது, முதலாளிகளுக்கு உற்பத்தியை பெருக்குவதகவும், தொழிலளர்களுக்கு உழைக்கும் நம்பிக்கையை தருவதாகவும் அமைய வேண்டும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்த பிரதமரின் கனவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் கனவு நிறைவேற, பொதுமக்களின் நம்பிக்கை, உழைப்பு மற்றும் அர்பணிப்பை அவர் பெறவேண்டும். வெறும் உணர்ச்சிமிக்க உரையும், தொலைநோக்கு சிந்தனையும் மட்டும் இந்தியாவை முன்னேற்றிவிடாது என்பதை பிரதமர் நரேந்திர மோதி நினைவில் கொள்ள வேண்டும்.

பின்குறிப்பு: மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களாகும். இதன் மூலம் யாரையும் புண்படுத்துவது கட்டுரையாளரின் நோக்கம் அல்ல.

No comments :