An Entrepreneur, Coach, IT Consultant, Strategic Adviser, and a Traveler craving to explore and contribute to forming a better society.

Thursday, July 16, 2015

பேய் – குழப்பமான மனநிலையில் நம் கண்களுக்கு புலப்படுகிற உயிரினமா?

3 comments :
பேய் (ghost) எப்பொழுதுமே சுவாரஸ்யமான ஒன்று. என் நண்பர்கள் பலரும் இதை பற்றி விவாதிக்க கேட்டிருக்கிறேன். நிறைய நண்பர்கள் பார்த்திருப்பதாக சொல்கிறார்கள்; மேலும், அது உண்மைதானென்று வாதம் செய்ய நிறைய மக்கள் இருக்கிறார்கள். இப்படி வாய்மொழியாக வரும் தகவல்கள் அனைத்துமே அடித்தளமற்ற கூற்றுகளாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. அறிவியல் முறையில் அணுக முயற்சித்தால், பேய் என்ற ஒன்று இல்லை என்றும், அப்படி எதுவும் இதுவரை நிரூபிக்க படவில்லை என்பது  மட்டுமே பதிலாக வருகிறது. உண்மையில் பேய் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்பது ஆச்சர்யம்.



இன்றைய அறிவியலால் மட்டுமே பேயை அணுக முடியாது. ஏனெனில், இன்றைய அறிவியலானது இதை ஒரு மூட நம்பிக்கையாக மட்டுமே பார்த்து வந்திருகிறது. இன்றைய அறிவியலின் முடிவுகளை, நாளைய ஆராய்ச்சிகள் மாற்றி அமைக்கலாம் என்ற கூற்று இங்கே நினைவில் வந்து செல்வது இயல்பு. இவ்வாறான நிலையில், பேய் என்ற விவாதத்தை, மூடநம்பிக்கை என்று ஒதுக்காமலும், தற்கால அறிவியல் முடிவுகளை தாண்டியும் பார்க்கவேண்டியது அவசியமாகிறது.

நம் கண்களானது நமக்கு முன் நிகழ்கிற நிகழ்ச்சியை காண்கிற சக்தியை தருகிறது. சிலருக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கலாம், சிலருக்கு பார்வையே குறையாக இருக்கலாம், சிலருக்கு நிறக்குறைபாடு இருக்கலாம், சிலருக்கு கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறைபாடு இருக்கலாம். அதுபோன்று நமக்கு பேயை காண்கிற குறைபாடு இருக்கலாமா? 

கிட்டப்பார்வை குறையுடையோர் கண்ணாடியின் துணைக்கொண்டு அக்குறையை போக்கிக்கொள்வது போல், எதன் துணைக்கொண்டு நாம் பேயை பார்க்க முடியும்? அல்லது பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் போல் “பேய்”, ஏன் நம் கண்களுக்கு புலப்படாத உயிரினமாக இருக்ககூடாது? 

சில நேரங்களில், எஞ்சி நிற்கும் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் பதில் கிட்டுவதில்லை.

3 comments :

Shankari Bagavathi said...

Wow

Shankari Bagavathi said...

Wow

Unknown said...

Nice analysis. Science is not ready to accept even the God......may be as a policy matter ��.
Butthe scientific researches now talking about some 'dark matters ', 'invisible energy fields', etc...������.