An Entrepreneur, Coach, IT Consultant, Strategic Adviser, and a Traveler craving to explore and contribute to forming a better society.

Sunday, June 26, 2016

நன்றி!

No comments :
தொழில் முனைவது சிரமம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தி Munaivu இணைய இதழில் வெளிவந்திருக்கும் எனது புதிய தொடரைப் பற்றிய உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. முகநூல் பக்கத்தில் பகிர்ந்தமைக்கும், தனியே தொடர்பு கொண்டு உள்ளீடுகள் (Inputs) கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.


இத்தொடருக்காக ஏற்கனவே 4 கட்டுரைகளை கொடுத்துவிட்டேன். எனவே, உங்களின் உள்ளீடுகளை அடுத்து வரும் பகுதிகளில் தேவைக்கேற்ப பொருத்திக் கொள்கிறேன். அடுத்தடுத்த கட்டுரைகளுக்கான உங்கள் கருத்துக்களையும், உள்ளீடுகளையும் தொடர்ந்து பகிருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இத்தொடரில் அடுத்து வரும் கட்டுரைகளில், சிறிதாக ஆரம்பித்து மிகப்பெரிய தொழிலை நிறுவிய நிறுவனங்களைப் பற்றியும், இடமோ பொருளோ இன்றி துவங்கி வெற்றி கண்ட நிறுவனங்களைப் பற்றியும் எழுதி இருக்கிறேன். சிறிய அங்காடி முதல் பெரிய வங்கிகள் வரை கண்ட வெற்றிகளை சுவாரசியமாக இந்த தொடரில் காணலாம். ஒரு தொழிலை எவ்வாறு நிறுவுவது என்பதையும் காணலாம்.

மேலும், உங்களுக்கு தெரிந்த சிறிய நிறுவனங்களையும் அதன் நிறுவனர்களையும் எனக்கு அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் வெற்றி, புதிதாக களம் கண்டு தொழில் முனைய விரும்புவோருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி தொழில் துவங்க ஒரு தூண்டுதலாகவும் அமையும் என நம்புகிறேன்.

எனது தொடரிலிருந்து சில பகுதிகள்:
"இதுபோன்ற நிறுவனங்கள் செய்த ஒரே பணி, மக்களை ஈர்த்து, அவர்களைக் கொண்டே, அவர்களின் தேவையை மையமாகக் கொண்டே, தங்களின் இணைய தளங்களைக் கட்டமைத்ததுதான்."
.....
"இந்தியா போன்ற பெரு நாடுகளின் பலம் அவற்றின் மக்கள் தொகைதான். மக்கள் தொகை இருக்குமளவிற்குத் தொழில் வாய்ப்புகளும் அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. தனது படிப்புக்கேற்ற வேலை, வயது முதிர்ந்தவுடன் பணி ஓய்வு என்ற நிலையில் இருந்து மாறுபட்டு, தொழில் முனைந்து தனக்கென ஒரு தனித்துவ அடையாளத்தைத் தேடும் பெரிய இளைஞர்க் கூட்டமும் அதற்கான வெளியும் சரிவர அமைந்த நவீன யுகத்தில் நாம் வாழ்கிறோம்."

மேலும் படிக்க, http://www.munaivu.com/innovative-ideas-wins-

No comments :