Sunday, December 25, 2016
விமர்சனத்தின் அரசியல்
முகநூல் நண்பர் திரு. மந்திரமூர்த்தி, தனது சுவரில் ஜெயமோகனின் கட்டுரையைப் பகிர்ந்திருந்தார். மேலோட்டமாகப் பார்ப்பின் கட்டுரை அருமை. மேலும் அதை ஆழ்ந்து அணுகும் போது விமர்சனங்களின் அரசியல் புலப்படுகிறது.
"விமர்சனம் கூடாது என்பதல்ல நான் சொல்லவருவது. விமர்சனம் ஆழ்ந்து அறிந்த ஒருவரால் சமநிலையுடன் செய்யப்படவேண்டும். முழுமையாகச் சொல்லப்படவேண்டும். சீண்டும் கூற்றுகள், பொத்தாம்பொது அபிப்பிராயங்கள், நக்கல்கிண்டல்கள் விமர்சனங்கள் அல்ல." - ஜெயமோகனின் கட்டுரையிலிருந்து.
ஜெயமோகனின் மேற்குறிப்பிட்டக் கூற்று விமர்சனத்தின் கட்டமைப்பு சார்ந்தது, மிக நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய ஒன்று. அவரின் இந்தக் கருத்தோடு பலரும் ஒத்துப் போகக்கூடும். ஆனால் இங்குப் பிரச்சினை, விமர்சனத்தின் கட்டமைப்பு பற்றிய புரிதலின்றி விமர்சனம் எழுதுவதல்ல. விமர்சனத்தின் கட்டமைப்பு பற்றிய ஒரு புரிதலின்றி எழுதுபவர்கள் விமர்சகர்களாக இருக்க முடியாது. அவை விமர்சனமும் இல்லை.
இங்குச் சிக்கலே விமர்சிக்கும் போது, விமர்சகரின் சமநிலையற்ற உள்ளுணர்வு வார்த்தைகளாய் வடிக்கப்படுவது தான். ஜெயமோகனின் அரசியல் நிலைப்பாடு சார்ந்த கட்டுரைகளில் "எழுதியவரின் பெயரைப் பார்ப்பேன்" என்று அவரே பொத்தாம் பொதுவாக எழுதி இருக்கிறார். ஆக, இது வெறும் கட்டமைப்பு பற்றியது மட்டுமல்ல.
விமர்சிப்பவர் சமநிலையின்றி இருக்கும் எழுத்தை வாசகனால் எளிதில் அடையாளம் காண முடிகிற போது, எழுதுபவரால் காண முடியவில்லையா? அல்லது சமநிலையின்றி மனது இருக்கும் போது விமர்சனம் எழுதுவது எழுத்தின் அரிப்பா என்பது புரியவில்லை?
அது ஒரு புறமிருக்க. பொதுத் தளத்தில் ஒரு படைப்பு விமர்சனத்திற்கு உட்பட்டது தான். ஆயினும், விமர்சனமானது அதன் எல்லைகளுக்குள் இருந்து விட்டால் புதிய எழுத்து, புதிய படைப்பு, புதிய முயற்சி, புதியவர்கள் என்ற 'சுழற்சி' இருந்துக் கொண்டே இருக்கும். கீழே உரலியில் இருக்கும் ஜெயமோகனின் கட்டுரையில் எது விமர்சனம் அல்ல என்பதைக் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பு மாலன் அவர்கள் தனது கட்டுரையில் ரசனை சார்ந்த இலக்கியத் தரத்தைப் பற்றியும் எழுதி இருந்தார். இது இரண்டுமே அனைத்து விமர்சகர்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறன்.
தமிழ் வெளியில் நக்கலும் கிண்டலும், சீண்டும் கூற்றுகளுடனும், பொத்தாம் பொது அபிப்ராயங்களுடனே படைப்புகளைப் பற்றிய விமர்சனங்கள் வலம் வருகின்றனவே, அவை விமர்சனம் இல்லையா?
விமர்சனங்கள் விரிவானவை. நுணுக்கங்கள், விமர்சிக்கும் படைப்பின் அறிவும், அதன் துறை சார்ந்த அறிவும் அதன் மூலம் படைப்பை அணுகுதல் என்று விமர்சனத்திற்கென்று ஒரு கட்டமைப்பு உண்டு. ஓரிரு வரிகளில் அதைச் சொல்ல முற்படுவது விமர்சனமாகாது. மாறாக, ஒரு சாமான்யன் சொல்வதைப் போன்ற வெறும் தனிமனிதக் கருத்து மட்டுமே. சில நேரங்களில் எழுதுபவரின் மொழி ஆளுமையில் நமது மனம் லயிக்கும். அத்தருணங்களில், வெறும் தனிமனிதக் கருத்தை விமர்சனம் என்று பொருள் கொள்ளக் கூடாது. அதிலும் குறிப்பாக, மனதில் தோன்றியதை ஓரிரு வரிகளில் சமூக வலைத்தளங்களில் ஜல்லியடிப்பதை விமர்சனங்களுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment